Shadow

Tag: Vanangaan movie review

வணங்கான் விமர்சனம்

வணங்கான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது. சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை வாங்கித் தரப்படுகிறது. அக்காப்பகத்தில், குளிக்கச் செல்லும் கண்பார்வையற்ற பெண்களை மூவர் ஒளிந்து நின்று ரசிக்கின்றனர். கொதித்தெழும் கோட்டி, வழக்கமாக பாலா முன்மொழியும் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறான். பாவம் செய்தவனை வதம் செய்துவிடுவதே அந்த தர்மம்! ஒரு படைப்பாளனாகக் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல், படத்தின் முதற்பாதியி...