
வன்முறைப்பகுதி விமர்சனம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது.
வீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடும...