
மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்
வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய, "மகளிர் ஆளுமை விருதுகள் 2018" பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் செப். 25 அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடெமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், "2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்...


