Shadow

Tag: Vennila Kabadi Kuzhu 2 review in Tamil

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று 'வெண்ணிலா கபடி குழு'வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா கருப்பு என அறிமுகப் படலத்திற்கென தனித் தனி காட்சிகள் வைத்துள்ளனர். கதையோடு ஒட்டாத நகைச்சுவைத் திணிப்புகள் படத்தின் ஆகப் பெரிய மைனஸ். 2009 இல் வந்த முதற்பாகம் போல், காதல் காட்சிகள் அவ்வளவு ரசனையாகவும் க்யூட்டாகவும் இல்லை. அர்த்தனா பினு, விக்ராந்துக்கும் இடையேயான காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். ப...