Shadow

Tag: Vinodhya Sitham vimarsanam

வினோதய சித்தம் விமர்சனம்

வினோதய சித்தம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விபத்தில் சிக்கும் பரசுராமிடம், 'தொண்ணூறு நாட்கள் தான் நீ உயிருடன் இருக்கப் போகும் காலம்' என காலன் ஓர் ஒப்பந்தம் போடுகிறான். சாகும் நாள் தெரிந்துவிடும் பரசுராம், தந்தையாக தன் கடமைகளை முடிக்க ஆசைப்படுகிறார். "சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழுற நாள் நரகமாகிவிடும்" என்றொரு வசனத்தை 'சிவாஜி' படத்தில் பேசியிருப்பார் ரஜினிகாந்த். அப்படி, சாகும் நாளைப் பற்றி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது செய்து முடிப்பதைத் துரிதப்படுத்த அளிக்கப்படும் கிரேஸ் டைம் ஆகும். அதை வரமாக்கிக் கொள்வதும், நரகமாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு தனி மனிதனின் மனோநிலையைப் பொறுத்ததே! பரசுராம், அதை வரமாக்கிக் கொள்கிறாரா, நரகமாக உணர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. காலையில் உடற்பயிற்சி செய்யும் தம்பி ராமையா லேசாகப் பயமுறுத்தினாலும், அவர் சமுத்திரக்கனியைப் பார்த்ததில் இருந்து படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. காலனாகச் சமுத்திரக்கனியும், ப...