தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம்.
பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் ...
'இன்ஜினியர் ஆஃப் தி இயர்' பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.
வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். அவரால் ஒரு நிமிடத்தைக் கூட வேஸ்ட் செய்ய முடியாத அளவு பிஸியான கதாபாத்திரமாம். ஆனாலும், நம்பர் 1 இன்ஜினியர் ஆன ரகுவரனைக் கார்னர் செய்ய தன் பொன்னான நேரத்தையும், கோடிக்கணக்கில் பணமும் செலவழிப்பார் என்பது முரணாக உள்ளது.
மனைவி என்றாலே கத்திக் கொண்டே இருப்பார் என்பதைப் படத்தின் முதல் பாதியில் தேவைக்கு அதிகமாகவே பதிகிறார். சிகரெட் பிடி...