32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

Dinesh R சேலம் Published: 16/08/2017 3 நிமிட வாசிப்பு Updated: 17/12/2017 சினிமா
எழுத்து அளவு:

VIP 2 success press meet

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் – சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம்.

பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியைக் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த், ” பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும். அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆஃபிஸ் விவரம் பற்றிச் சொன்ன பொழுது, எனக்கு நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஐ.பி-3 ஆம் பாகத்தையும் இயக்குவேன்” என்றார்.

படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசிய போது, ” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். இருப்பினும் படத்தின் இந்த மிகப் பெரிய வெற்றி மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெற காரணம்.

கஜோல் அவர்களிடம் கதை சொன்ன பொழுது, ‘மொழி புரியாததால் நான் படம் பண்ணலை. ஆனா படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நல்லாயிருக்கு. அதற்காகப் பண்றேன்’ எனச் சொன்னாங்க. அவங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப சரின்னு இப்போ ப்ரூவ் ஆகிடுச்சு. படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண் தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாகப் படத்தின் மூன்றாம் பாகம் வரும். எப்பன்னு சொல்ல முடியலை. நான் தான் திரைக்கதை எழுதுவேன். திரைக்கதைக்கு செட்டாகுற மாதிரி இயக்குநரை அப்போ தான் முடிவு செய்ய முடியும்.

பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும். அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயாகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும். இதனால் இப்படத்தைக் குடும்பத்துடன் வந்து பார்த்துப் பெண்களும் குழந்தைகளும் எஞ்சாய் பண்றாங்க. இப்போதைக்கு உலகிற்குத் தேவை அன்பு மட்டும்தான். அன்பைப் பரப்பினால் இயற்கை கூட நம் பேச்சைக் கேட்கும்” என்றார் பவ்யத்துடன் தனுஷ்.

வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று இரட்டை மகிழ்ச்சியில் உள்ளது வி.ஐ.பி-2 படக்குழு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.