
ஆர்யன் விமர்சனம் | Aryan review
விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷாலே தயாரிக்க உருவாகியுள்ள படம் ஆர்யனாகும். ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் நெறியாளராக இருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரைப் பேட்டி எடுக்கிறார். அப்போது அங்கு பார்வையாளராக வரும் செல்வராகவன், துப்பாக்கியை எடுத்து நீட்டி மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்புகிறார். அத்துடன் தான் ஒரு எழுத்தாளர் என்றும், தன்னுடைய படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் கூறுகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தன்னுடைய மாஸ்டர் பீஸை எழுதியிருக்கிறேன் எனச் சொல்வதோடு, தொடர்ந்து ஐந்து கொலைகளைச் செய்யப் போவதாகவும், முடிந்தால் போலீஸார் தடுத்து நிறுத்தட்டும் என்ற சவாலை விடுக்கிறார். போ...





