
விசித்திரன் விமர்சனம்
ஜோசஃப் எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘விசித்திரன்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர்.
விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட காவல்துறை அதிகாரியான மாயன், தன் முன்னாள் மனைவி ஸ்டெல்லாவின் மரணம், விபத்தால் ஏற்பட்டதன்று, அது ஒரு கொலை என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மகள் டயானா மரணத்திற்கும், முன்னாள் மனைவி ஸ்டெல்லா மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து, ஒரு பெரும் மருத்துவ மோசடியைக் கண்டுபிடிக்கிறார். அதைச் சட்டத்தின் முன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் அபாரமான முடிவு.
தன் கேரியரில் மிக முக்கியமான படம் என்ற அதீத பிரக்ஞையுடன் மாயனெனும் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். அனைத்தையும் இழந்த மாயன், பீடியிலும் குடியிலும் தன் நாட்களைக் கழிக்கிறார். படத்தின் முன் தயாரிப்பாக, ஜோசஃப் பட எழுத்தாளரான ஷஹி கபீரைச் சந்தித்துள்ளார். அவரது உடற்மொழியை உள்ளவாறு திரையில் கொண்டு வர, இரண்டரை லிட்டர...


