Shadow

Tag: Washington Sundar

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

சமூகம்
இந்திய அணி, கப்பாவில் அடைந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரங்களால் சொல்லி விட முடியாது. உணர்வுகளால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். 325 ரன்களை ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அதுவும் இலக்கை சேஸ் செய்யும் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லயன் என்ற மிகச் சிறந்த கூட்டணிக்கு எதிராக ஆடி ஜெயிக்கும் போது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன? நால்வரும் ஐசிசி தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார்கள். அதில் பாட் கம்மின்சும், ஹேசல்வுட்டும், முதல் மற்றும் 4ஆம் இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முண்ணனி பந்து வீச்சாளர்களோ காயம் காரணமாக வெளியே இருக்கிறார்கள். ஆஸி பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் அனுபவம் 250க்கும் மேல் என்றால், இந்திய பந்து வீச்சாளர்களின் அனுபவமே வெறும் 7 போட்டிகள்தான். ஆடிய வீரர்களில் ஒப்பீட்டளவில் அனுபவம் வாய்ந்த வ...