
லோகா: 10 நாட்களில் 100 கோடி வசூல்
துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த லோகா: சாப்டர் 1 - சந்திரா உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.
வேஃபேரர் ஃபிலிம்ஸ் பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர். சென்னையிலும் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியைப் பக...




