
தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் விமர்சனம்
அமிதாப் பச்சனும், அமீர் கானும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம். 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படம். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' போல ஒரு இந்தியப் படம் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தது படத்தின் ட்ரெய்லர்.
தக்ஸ் என்பது கொலை, கொள்ளையில் ஈடுபடும் கும்பலுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அப்படி இந்துஸ்தானின் விடுதலைக்காகப் புரட்சி செய்யும் ஒரு குழுவிற்கு, தக்ஸ் என முத்திரையிட்டு, அதை அடக்கி ஒடுக்க நினைக்கிறார் ஜான் க்ளைவ் எனும் ஆங்கிலேயர். அது அவருக்குச் சாத்தியமானதா என்பதுதான் படத்தின் கதை.
இளவரசி ஜஃபிராவின் கண் முன்பே ஜான் க்ளைவ், அவள் அண்ணன், அம்மா, அப்பா ஆகிய மூவரையும் நம்ப வைத்து, துரோகமிழைத்துக் கொன்று விடுகிறார். பதினோரு ஆண்டுகள் கழித்து தனது வஞ்சத்தை ஜஃபிரா எப்படித் தீர்த்துக் கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு.
நல்லவனாய் வாழப் ப...