சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இயக்குநர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லாப் பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய ட்விட்டரில் கூட அண்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று ட்வீட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போ...