Shadow

சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா

Sindhubaadh-music---Yuvan

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இயக்குநர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லாப் பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய ட்விட்டரில் கூட அண்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று ட்வீட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.

படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காகப் பின்னணி இசைக்கும் போது நான் வியந்து, ரசித்து, அனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்தான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .

எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாகப் பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாகப் பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கிறான் சிந்துபாத்” என்றார்.

இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.