Shadow

Tag: Yuvan Shankar Raja

“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா

“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா

சமூகம், சினிமா
இரண்டு தலைமுறைகளாக தமிழ்த்திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது 'U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசைத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக்கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃப...
யுவன் இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதல்முறையாக 360° மேடையில்

யுவன் ஷங்கர் ராஜாவின் வருத்தம்

யுவன் ஷங்கர் ராஜாவின் வருத்தம்

சினிமா
ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் "Yuvan Shankar Raja - Your first love" இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். "இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது ...
500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

சினிமா, திரைத் துளி
2019இல் யூடியூப் தளத்தை 'பிளாக் ஹோல்' பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் 'ரௌடி பேபி' என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் 'Bohemian Rapsody', 'A Star is Born' மற்றும் 'Gully boy' போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது 'மாரி 2'வின் 'ரௌடி பேபி' தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மேற்கோள் அல்ல, 'Rowdy Baby Song reaction', 'Rowdy baby Cover' (Instrumental & Vocals), Talking Tom version மற்றும் நிறைய விஷயங்களை இணையத்தில் பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 'Song reaction' பற்றிக் குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ளவர்களைப் பற்றியது மட்டுமல்ல, கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர...
பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி

பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் 'பேய் பசி'. இந்தப் படத்தை 'ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் ப்ரைவேட் லிமிடெட் (Rise East Entertainment Private Limited)' நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு அனைவரையும் உடனே கவரும் ஒரு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிகப் பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவைத் தரும் விஜய் சேதுபதி 'பேய் பசி' படத்தின் இந்தப் பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்தக் கிளப் பாடலைத் தனது அதே வசீகர பணியில் பாடி அ...