Shadow

Tag: Zhakart Publication

எழுதப்படாத முகங்கள் |  மு.ஜெகன் கவிராஜ்

எழுதப்படாத முகங்கள் | மு.ஜெகன் கவிராஜ்

இது புதிது, புத்தகம்
நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருப்போம். அதில் பெரும்பாலான முகங்கள் நம் நினைவில் இருந்து அகன்றிருக்கும். வெகு சில முகங்கள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருக்கிற ஒவ்வொரு முகங்களின் பின்னாலும் ஏதோவொரு சுவையுடன் கூடிய வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமின்றி அந்த முகங்களில் சில நம் வாழ்க்கையின் மீளாப் பக்கங்களை தீராத் துயரத்துடன் எழுதி இருக்கக்கூடும். துவண்டு கிடந்த நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கக் கூடும், வாய்ப்பற்று வறண்டு கிடந்த நம் வாழ்வை வளமாக்கியிருக்கக் கூடும்,  தோழமையுடன் நம் தோள் தொட்டிருக்கக் கூடும், நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கக் கூடும்.  இப்படி ஏதோவொரு சிறு துரும்பையாவது நம் வாழ்வில் நிகழ்த்தியிருந்தால் மட்டுமே அந்த முகங்கள் நம் நினைவில் இருக்கும். ஆனால் 'எழுதப்படாத முகங்கள்' புத்தகத்தின் ஆசிரியர் மு.ஜெகன...