Shadow

Tag: ZI Clinic

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

மருத்துவம்
உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிற...