Search

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

ZI-Clinic---Cool-Sculpting

உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘கூல்ஸ்கல்ப்டிங் ’என்ற கொழுப்புச் செல்களை உறையவைத்து, உடல் எடையைக் குறைய வைக்கும் இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பச் சிகிச்சையை உலகத்தின் முன்னணி உணவு மற்றும் மருந்திற்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் எஃப் டி ஏ (F D A) எனும் சர்வதேச அமைப்பு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்திருக்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையைப் பின்பற்றினாலும் உடலிலுள்ள கொழுப்புச் செல்கள் பிடிவாதமாக இருக்கவே செய்கின்றன. பலரும் தங்களுடைய உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களில் பலருக்கு இந்த ‘கூல்ஸ்கல்ப்டிங்’ என்ற மருத்துவத் தொழில்நுட்ப யுக்தி மூலம், அவர்களின் உடலில் பிடிவாதமாக தங்கியிருக்கும் கொழுப்புச் செல்களை அகற்றப்படும் பொழுது அவர்களின் நம்பிக்கை உயரும். முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களுக்குக் கூட, அவர்களின் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புச் செல்களை அகற்றும், அறுவை சிகிச்சையற்ற இந்த மருத்துவ நடைமுறை பாதுகாப்பானது மற்றும் முழுமையான பலனைத் தரக்கூடியது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இன்றைய தேதியில் கொழுப்பை குறைப்பதற்கான மருத்துவச் சிகிச்சையில், அறுவைச் சிகிச்சையற்ற மருத்துவச் சிகிச்சை முறையில் முதல் பத்து இடங்களில் இந்த ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற நவீன மருத்துவ முறையும் ஒன்று. எஃப் டி ஏ-வால் அனுமதியளிக்கப்பட்ட இந்த மருத்துவ சிகிச்சையால் இந்தியாவில் பெரிய புரட்சியே நிகழவிருக்கிறது.

கூல்ஸ்கல்ப்டிங் என்றால் என்ன?

கூல்ஸ்கல்ப்டிங் என்பது அழகிய உடலமைப்பைப் பெறுவதற்கான சிறப்பு சிகிச்சையாகும். இது அறுவை சிகிச்சையற்றது. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை. உடலில் தங்கியிருக்கும் விரும்பத்தகாத கொழுப்புச் செல்களை உறைய வைத்து அகற்றும் சிகிச்சை அல்லது செயலிழக்கச் செய்யும் சிகிச்சை. கிரையோலிபாலிஸிஸ் என்ற உறைய வைக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கொழுப்பு செல்களை உறைய வைப்பதற்கும், குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து அதனை அழிப்பதற்கும், பின் அருகிலிருக்கும் திசுக்களைப் பாதிக்காமல் அதனை வெளியேற்றுவதற்கும் இந்த மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செல்கள் ஒரு முறை இறந்துவிட்டால் அவை உடலைவிட்டு இயல்பாகவே வெளியேறிவிடும்.

கொழுப்புச் செல்களை நீக்கும் செயல்முறை இது. நம் உடலில் கொழுப்பு செல்கள் தேவையான அளவிற்கு நிரந்தரமாக இருக்கும். நாம் எடையை அதிகரிக்கும் போது இவ்வகையான செல்கள் கூடுதலாக அதிகரிக்காது. ஏற்கனவே இருக்கும் செல்கள் பெரியதாகிவிடும். இந்நிலையில் இந்தப் பெரிதாகி போன செல்கள் சுருக்கமடையச் செய்தால், உடல் எடை குறையும். அழகிய உடலமைப்புப் பெறுவதற்கான கூல்ஸ்கல்ப்டிங் என்ற சிகிச்சையைப் பெறும் போது, இந்தச் சிகிச்சையைப் பெறுபவர்களின் எண்ணத்திற்கேற்ப உடலமைப்பைப் பெற இயலும்.

ஜீ கிளினிக் (www.ziclinic.com) நிர்வாக இயக்குநராக இருக்கும் டாக்டர் வி.சேதுராமன், ‘கண்ணா லட்டு திண்ணா ஆசையா’ படத்தில் நாயகனாக நடித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, காஸ்மெடிக் தோல் அறுவை சிகிச்சையில் அனுபவம் பெற்ற நிபுணரும் கூட. இவர் தோல், தலைமுடி, பொலிவான தோற்றம், இளமையான தோற்றம் தொடர்பான சிகிச்சையளிப்பதிலும் வல்லவர். இவர் இந்த துறையில் ஆர்வம் கொண்டு, உலகின் பல நாடுகளுக்கு பயணித்து, அங்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புச் சிகிச்சைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்து கொண்டு அதனை இந்தியாவில் வழங்குவதில் எல்லையற்ற விருப்பம் கொண்டவர். காஸ்மெட்டிக் டெர்மடாலஜியில் எட்டாண்டு அனுபவம் கொண்ட இவர் தான் இந்த ஜீ கிளினிக்கைத் தொடங்கி நடத்தி வருகிறார். நியாயமான கட்டணத்தில் சர்வதேச அளவில் சிகிச்சைகளை அளிக்கவேண்டும் என்பது தான் இவரின் கனவு.

இந்தியாவின் மருத்துவ தலைநகராக வளர்ச்சியடைந்து வரும் நம் சென்னையில், தம்முடைய கனவை நனவாக்குவதற்காகவும், தரமிக்க மருத்துவச் சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இந்த ஜீ கிளினிக் செயல்படுகிறது. இந்த ஜீ மருத்துவமனையில் அழகியலுக்கான தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் நியாயமான கட்டணத்தில், எஃப் டி ஏ அங்கீகரித்த மருத்துவ உபகரணங்களுடன் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பாகவும், விரைவாகவும், உண்மையான அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.