32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தமிழில் தெலுங்கு ‘உஷாரு’

Dinesh R சேலம் Published: 05/01/2019 1 நிமிட வாசிப்பு Updated: 17/01/2019 சினிமா
எழுத்து அளவு:

திரையுலகிற்கு எப்பொழுதுமே பிராணவாயுவாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே! ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா.

அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் “உஷாரு”. உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள்படும். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறது. சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்குத் திரையுலகின் வசூல் கணக்கு. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

KK-Kathirஇந்தப் படத்தை, ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். பலத்த போட்டிக்குப் பிறகு படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J.பணீந்திரகுமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தைத் தயாரித்தவர்.

புதுமுகங்களும் பிரபலங்களும் இணைய உள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளவர் ராதன். விரைவில் படப்பிடிப்பைத் துவங்க உள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.