Shadow

“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

Villian M.S.Kumar

நடிகர் பாண்டியராஜின் மகன் ப்ரித்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள படம் “தொட்ரா”. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில், டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த ஜெய்சந்திரா சரவணக்குமார் எனும் பெண்மணி தயாரித்துள்ளார்.

“ ‘என் மகனுக்குத் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆசை. அவனை ஒரு படத்திலாவது நடிக்க வைத்துவிடு’ என்றார் என் மாமியார். அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராகப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்குச் செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்” எனக் கூறினார் ஜெய்சந்திரா. தொட்ரா படத்தில், அவரது கணவர் எம்.எஸ்.குமார் வில்லனாக அறிமுகமாகவுள்ளார்.

Thodraa Producer Jaichandraதொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்கியராஜ், “என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார்.. அந்த வகையில் இந்தப் படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும், தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என்று வாழ்த்தினார்.