ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகப் படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுக்காரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா என நிறைய படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.
அதன் பின்பு லத்தீப்-உம் நானும் இணைந்து தனியாகப் “பொற்காலம்” படத்தை விநியோகம் செய்தோம். அந்தப் படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிகைகளே கிடையாது.
தமிழ்நாட்டோட பெரிய ஏரியான்னு சொல்ற NSC- இல் படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்குக் கொண்டுபோய் சேர்த்தோம். அந்தப் படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது பத்திரிகைத்துறை தான்.
அஜித் உடன் வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம் என நிறைய வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம்.
விஜய் உடன் சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல் எனப் பிரமிக்கிற வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன் என தமிழ் சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களை வெளியிட்டதுல எங்களுக்குப் பெருமை.
விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள; தனுஷின், அது ஒரு கனாகாலம், தேவதையைக் கண்டேன், கொடி, விசாரணை; விக்ரமின் பீமா; சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா; சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்; விஜய்சேதுபதியோட
நானும் ரளெடிதான்; ஜீவாவின் ராம்; சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்; சமுத்திரகனியின் அப்பா; கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர்; முரளியின் பூந்தோட்டம்; பார்த்திபனின் வெற்றி கொடிகட்டு, அழகி; என இப்படி கிட்டதட்ட மூன்று தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம்.
விநியோகத்தில் எங்களுக்குக் கிடைத்த வெற்றிக்குப் பிறகு நாங்க தயாரிப்பில் இறங்கினோம். சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தைத் தயாரித்தோம்.
மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்ப்படம் 2, அறம், ராட்சசன் என இந்த வருடமும், போன வருடமும் வெளியான முக்கியமான படங்களைத் தயாரித்திருக்கிறோம்.
தற்போது, மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படத்தினைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம்.
இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்கள் தயாரிப்பில் இருக்கு. அந்த அறிவிப்புகளைக் கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்கள் விநியோகம் பண்ண ஆரம்பித்து 25 வருடம் ஆகிவிட்டது.
550 படங்களுக்கு மேல் வெளியிட்டு இருக்கிறோம். இந்த நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டலயும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் (Trident Arts) களம் இறங்கியிருக்கு. ஆட்டோ ஷங்கர் என்ற வெப் சீரியஸையும் தயாரிச்சு வெளியிடுகிறோம்.
25 வருடங்களாகத் தொடரும் எங்கள் பயணத்தை, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என் மகள் சௌந்தர்யா பகிர்ந்து கொள்ளப்போகிறார். தற்போது, வெப் சீரிஸ் தயாரிப்புகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி!!
– ரவீந்திரன்
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்