Shadow

Tag: Vijay Sethupathi

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
கிறிஸ்துமஸ் பிறக்க இருக்கும் நள்ளிரவு நேரத்தில் தன் நான்கு வயது மகளைக் கூட்டிக் கொண்டு பம்பாய் நகர வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறாள் படத்தின் நாயகியான மரியா (கத்ரீனா கைஃப்).  எப்படி தன் மகன் இயேசு பிரானை ஏரோது மன்னனின் கொலைக்களத்தில் இருந்து காப்பாற்ற மரியாளும் யோசேப்பும் முயன்று அந்த நடு இரவில் ஒடிக் கொண்டு இருந்தார்களோ, அதே போல் தன் மகளின் நன்மைக்காக இந்த மரியாவும் தன்னந்தனியே ஒடிக் கொண்டிருக்கிறாள்.  இந்த மரியாவின் மகளுக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது; தன் மகளைக் காக்க மரியா எடுத்த நடவடிக்கை என்ன என்பதே இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கின்ற திருப்பங்களும்  எதிர்பார்க்கும் திரைக்கதையும் இருக்கும் போது,  பல தருணங்களில் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.  சில தருணங்களில் கதை போகும் போக்கை கச்சிதமாக கணித்துவிட்டோம் என்கின்ற மமதை...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...
“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
 ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது.செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில்  ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK UNI...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும...
’96 விமர்சனம்

’96 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லியனத...
ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார். ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட 'சினிமா பாரடைஸ்' எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157 ந...
ஜுங்கா என்றால் என்ன? – விஜய் சேதுபதி

ஜுங்கா என்றால் என்ன? – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களைப் பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம். இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்க...
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  நிறுவுமுறைத் திரைப்படத்துக்குத் தகுந்த பாணியில் நடித்துக் கொடுத்திருந்தாலும், தனக்கே உரிய  வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அவரது உத்தி இப்படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. மெளன ராகம் கார்த...
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல். “படத்தில் ஒப்பந்த...