Shadow

With Love ஸ்டாலின்

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.

முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்தச் சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகித் தனது நேர்த்தியான கதை சொல்லலால், பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தை அளித்துள்ளார்.