திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,
“டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி டா ” என்றார்.
“இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க?? இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்” என்றான் குழப்பத்துடன்.
ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.
அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.
26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroom
1. Written test
2. Group Discussion
*only for freshers
இப்படியும் ஒரு விளம்பரமா என்று ஆச்சர்யமாக பார்த்தான் ராஜேஷ்.
முழுமையாக படித்தவன் இறுதியில் அது என்ன “only for freshers” என்றான் தன் தந்தையிடம்.
அப்பா நான் செலக்ட் ஆகுறேனோ இல்லையோ, ஆனா இந்த பொண்ண ஒரு தடவையாவது பார்த்தே ஆகணும் என்று கூறி முதல் சுற்றுக்கு தயாரானான் ராஜேஷ்.
தொடரும் ….