Shadow

Tag: இரகுராமன்

சோலோ இசை – ஒரு பார்வை

சோலோ இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
'வாயை மூடி பேசவும்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் "சோலோ". தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். சோலோ - ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார். துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப "சிவாவின் உலகம்", "சேகரின் உலகம்", "ருத்ராவின் உலகம்" என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர். ...
கொடி இசை – ஒரு பார்வை

கொடி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் - ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன் விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 2. பாடல் - சிறுக்கி வாசம் பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் சந்தோஷ் நாராயணன் இசையில் இன...
கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா. 1. பாடல் -  காதல் இருந்தால் போதும் பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். 2. பாடல் - என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே பாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம் லியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புத...
திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்

திருகோகர்ணம் – அரபிக் கடலோரத்தில்

கட்டுரை
நானும் என் மனைவியும் ஒரே அலுவலகத்தில், ஒரே டீமில் பணிபுரிவதால், மற்றவரின் பணி சுமையினை நன்கு அறிவோம். என்னை விட என் மனைவிக்கே அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி அதிக ஆணி. இந்தக் கவலைகளை மறக்க, இதுவரை நாங்கள் பார்த்திராத ஆனால் பார்க்க வேண்டிய ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து எனது தேடலைத் தொடங்கினேன். நாங்கள் ஹைதராபாத்தில் இருப்பதால், இங்கிருந்து செல்லக்கூடிய இடங்களை ஆராய்ந்தேன். மேலும் அது குளிர் காலம் என்பதால் ஹில் ஸ்டேஷனைத் தவிர்க்கவும் முடிவு செய்தேன். சில நாட்கள் இணையத்தில் மூழ்கி சில இடங்களைத் தேர்வு செய்தேன் 1. ஹம்பி, கர்நாடகா 2. டண்டேலி, ஹூப்ளி, கர்நாடகா 3. கோவா 4. கோதாவரி ரிவர் ட்ரிப், ராஜமுந்திரி,ஆந்திரா 5. அஜந்தா எல்லோரா, ஔரங்காபாத், மஹாராஷ்டிரா 6. கோகர்ணா (Gokarna), கர்நாடகா இவை அனைத்தும் நாங்கள் ஓர் இரவு ரயில்/பேருந்து பயணத்தில் சென்றடையக் கூடிய...
மேகமலை ஒரு பயணம்

மேகமலை ஒரு பயணம்

கட்டுரை, மற்றவை
சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது. இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி, கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.காலை 11 மணியளவில் சின்னமன்னூ...
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 1. பாடல் - ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் - பபோன், மரியா  வரிகள் - நா.முத்துக்குமார்  பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் "அடியே" பாடலை பாடியவர். கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்....
தலைவா இசை – ஒரு பார்வை

தலைவா இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின்  படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், விஜய்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம். நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். 1. பாடல் - தமிழ் பசங்க  பாடியவர்கள் - பென்னி டயால், ஷீஷே - சைகோ யூநிட்தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் "டான்சராக" நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.2. பாடல் - யார் இந்த சாலையோரம்  பாடியவர்கள் - ஜீ.வி பிரகாஷ், சைந்தவி "யார் இ...
குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
"வாகை சூடவா" படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம். கிப்ரான், அடுத்து "வத்திக்குச்சி"யில்  மேலும் தன் திறமையை  நிரூபித்தார். இப்பொழுது சசிகுமார்  மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்றாவதாக  குட்டி புலி இசை வெளிவந்துள்ளது.  வைரமுத்துவின் வரிகளில் படத்தில் மொத்தம் நான்கு  பாடல்கள்.1.அருவாக்காரன்: 4.5/5 பாடியவர் - பத்மலதா, கௌஷிகி சக்ரவர்த்திஅருமையான குரல், அற்புதமான இசை மற்றும் வைரமுத்துவின் அழகிய வரிகள். இது போதாதா ஒரு பாடல் பிரபலமடைய? "அருவாக்காரன்" பாடல் பலரது கைப்பேசியில் ரிங் டோனாக அமையவிருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.2. காத்து காத்து: 4.2/5 பாடியவர் - கோல்ட் தேவராஜ் ஒரு புதுவகையான பாடல், "கோல்ட் தேவராஜின்" குரலில் மற்ற நாட்டுபுற பாடல்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டு நிற்கிறது. தொடக்கம் முதலே பின்னிட்டாங்க.  திரையில் காணும்பொழுது முகம் சுழிப...
மரியான் இசை – ஒரு பார்வை

மரியான் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் வரிகளுக்கு, யுவன் வேறு குரல் கொடுத்திருக்கிறார். ஆக பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் இசை வெளிவந்துள்ளது..படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்.1. எங்க போன ராசா:  5/5 பாடியவர் - சக்தி ஸ்ரீ கோபாலன் வரிகள் - குட்டி ரேவதி,  ரஹ்மான் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ள பாடலின் மூலம் பிரபலமடைந்த  சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் ஒலிக்கும் 'எங்க போன ராசா' பாடல் ஒரு சுகமான சோகம். பிரிவின் சோகத்தை விவரிக்கும் அந்த வரிகள் அருமை. உடன் இசைப்புயலின் மென்மையான இசை, ஒரு கணம் நம்மையும் அந்தச் சோகத்துள் சுண்டி இழுத்துக்கொள்கிறது.2. இன்னும் கொஞ்ச நேரம்: 4.5/5 பாடியவர் - விஜய்...
ஸ்பெஷல் 26

ஸ்பெஷல் 26

அயல் சினிமா, சினிமா
தனது முதல் படத்திலேயே எத்தனை பேரால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்க்க இயலும்? அப்படி ஈர்த்த ஒருவர் தான் 'நீரஜ் பாண்டே'. 2008-ல் வெளிவந்த 'எ வெட்னஸ்டே!' என்ற  இந்திப் படத்தின் இயக்குநர். இப்படம் 'உன்னை போல் ஒருவன்' என கமல் ஹாசன் நடிப்பில் தமிழிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தியில் இருந்து தமிழுக்கு படம் ரீ-மேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இவரது படம் 'காமன் மேன்' என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் "ஸ்பெஷல் 26" என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் நீரஜ் பாண்டே.இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் சிபிஐ/வருமான வரித்துறை அதிகாரிகள் என்று ஏமாற்றிப் பணத்தைத் திருடுகிறது் ஒரு கும்பல். அப்படி டெல்லியில் ஒரு மந்திரியின் வீட்டை போல...
இயற்கை அன்னை

இயற்கை அன்னை

கவிதை, படைப்புகள்
 விரி கடலும் தொடு வானமும், வானில் தவழும் வண்ண மேகமும், மேகத்தினூடே மின்னும் சூரிய, சந்திர விண்மீன்களும் தந்தாள்!பச்சை கம்பள புல்வெளிகளும், பனிமூடிய மலை முகடுகளும், மலை முகட்டினின்று பொன் வெள்ளி தகடென வழியும் அருவிகளும் தந்தாள்!கனிம வளங்களும், அடர் கானகமும் தந்து, உயிர்க்கு அமிர்தமாம் மழையும் மாநதிகளும் தந்தாள்!பசிப்பிணி போக்கும் அருங்கனிகளும், இன்ன பிறவும் தந்தாள்வனப்பு மிகு வண்ண மலர்களும் தந்து கூறினால் இயற்கை அன்னை என் செவியில், மானுடனே இவையாவும் உனக்கு மட்டும் உரியதன்று, உன்னுடன் புவியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும், இனி வாழப்போகும் அணைத்து உயிர்களுக்கும் என்று!(நோ.. நோ.. எனக்கு கவிதைலாம் எழுத வராது. நம்புங்க. இது என் மனைவியின் அம்மா எழுதியது)- இரகுராமன்...
இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்

இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்

கட்டுரை, புத்தகம்
என் அப்பா M.A. வரலாறு  படித்தவர், அதனால் தானோ என்னவோ எனக்கும் வரலாற்றின் மேல் ஒரு தனி ஆர்வம் உண்டு..ஒரு முறை ஹைதிராபாத்திலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து விழுப்புரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு சென்றிருந்தேன்.. எப்பொழுதும் பேருந்து நிலையம் வந்து அழைத்துசெல்லும் என் தந்தை அன்று ஏனோ ஷேர் ஆட்டோ பிடித்து நீயே வந்துடு என்று கூறிவிட்டார்..ஞாயிறன்று  என் தந்தைக்கு, அப்படி என்ன வேலை இருக்கப்போகுது  என்று எண்ணிக்கொண்டே வீட்டை  அடைந்த எனக்கு கோபம்.. 800 கிமீ தொலைவு பயணம் செய்து வந்த என்னை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.. காரணம், கையில் ஒரு புத்தகம்..கருப்பு அட்டை அதில் ஏதோ ஒரு பறவை.. அருகே நெருங்கி சென்று பார்த்தேன் 'மொஸாட்' என்றிருந்தது.'மொஸாட்' - இஸ்ரேலிய உளவு துறை.. சரியாக கூற வேண்டுமேயானால் இஸ்ரேலின் உயிர்த்  துடிப்பு அவர்கள். அப்படித் தான் என் தந்தை ஒரு முறை என்னிடம் கூறினார...
டுர்ர்ர்ரீ

டுர்ர்ர்ரீ

கட்டுரை, புத்தகம்
படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, "நல்ல புக் ஒன்னு சொல்லுடா?" என என் பட்ஜெட்டையும் சொன்னேன். அவன் யோசிக்காம, "வாடிவாசல்" என்றான்."வாடி வாசலா?""செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.""உன்கிட்ட இருக்கா?""இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் சொன்னாங்க.""அட வெண்ண. படிக்காமலே இவ்ளோ பில்டப்பா? உன்ன போய் கேட்டேன் பாரு" என்று நான் சொல்றத காதில் வாங்காம, ஷெல்ஃபில் தேடி எடுத்து புக்கை கையில் கொடுத்துட்டான். சின்ன புக். 50 ரூபாய் தான். ஆனா முதல் பதிப்பு 1959ன்னு போட்டிருந்துச்சு. புரியுமான்னு சந்தேகம் வந்துச்சு. சரி போய் தொலையட்டும் என ஒன்னும் சொல்லாம...
“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

கட்டுரை, மற்றவை
ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன். ஒரு வியாழனன்று...
என்திசை வீசா தென்றல்

என்திசை வீசா தென்றல்

கதை, படைப்புகள்
எவ்வளவு நாள்? வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது.துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை. ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன். நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா,காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது.ம்ம்..நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன. அக்னி நட்சத்திரம் அனைத...