ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய்.
ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது.
சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என ஜீ.வி.பிரகாஷிடம் பரிந்துரைத்துள்ளார். விஷூவலில் சாராவின் லிப்-சின்க் கச்சிதமாய் இருப்பது பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
தெய்வத்திருமகள் படத்தில் சாராவிற்கு பின்னணிக் குரல் கொடுத்த ஷ்ரிங்காதான் சைவம் படத்திலும் கொடுத்துள்ளார். ஷ்ரிங்கா, சாரா, உத்ரா, ஆகிய மூவரும் மேடையில் தோன்றியதுதான் விழாவின் ஹைலைட்.