
நிற்குமிடத்திலிருந்தே தனக்கு
வேண்டியதை எடுத்துக்கொண்டு
பிறருக்கு தந்துகொண்டும்
எத்தனை உயிர்கள்
வாழ்ந்துகொண்டிருந்தது
அதன் உடம்பில்
இதுவரையில் வாழ்வளித்துவந்தது
வந்த புயலையெல்லாம்
புறம் தள்ளி
இன்று நெடுஞ்சாலைத்துறை
நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது
துண்டு துண்டுகளாய்
– சே.ராஜப்ரியன்