Shadow

யுனிலீவர் கழுத்தைச் சுற்றிய வேதாளம் ரதீந்தரனின் படம்

இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தை ரதீந்தரன் ஆர். பிரசாத் இயக்குகிறார். இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ) மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். இப்படம், இந்தியப் புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாக எடுக்கப்படும் பயணச் சாகசத் திரைப்படமாகும்.

Idhu vedhalam sollum kadhai Rathinhthiran R.Prasad

இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் புரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் புரிட்ஜ் (Greg Burridge) இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைச் சேர்ந்த ரோபர்டோ ஜஸாரா (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் இயக்குநரான ரதிந்திரன் ஆர்.பிரசாத், கொடைக்கானல் ஓண்ட் (Kodaikanal won’t) மியூசிக் விடியோவை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானலிலுள்ள யுனிலீவர் கம்பெனி வெளியிட்ட நச்சுக் கழிவுகளைச் “சுத்தம் செய்” எனக் கேட்கும் சமூக அக்கறையுள்ள அவ்வீடியோவைப் பாரீர்.

2015 இல் வெளியிடப்பட்ட இந்த வீடியோவிற்கு, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் கொடைக்கானல் ஓண்ட் வீடியோவைப் பாராட்டியுள்ளனர். ரதீந்தரன் பிரசாதின் 30 நிமிட குறும்படம் ‘ஸ்வேயர் கார்ப்பொரேஷன்’ (Swayer corporation) கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

‘இது வேதாளம் சொல்லும் கதை’ திரைப்படத்தை ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் சார்பில் பஷாக் கஸிலர் பிரசாத் (Basak Gaziler Prasad) தயாரிக்க உள்ளார்.

‘இது வேதாளம் சொல்லும் கதை’ படம் வெற்றி பெற இதுதமிழ் குழுமம் சார்பாக வாழ்த்துகள்.

பி.கு.: 15 வருட போராட்டங்களுக்குப் பிறகு, மார்ச் 2016இல் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.