32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

உயிரோடு இருங்கள்

Dinesh R சேலம் Published: 04/11/2011 1 நிமிட வாசிப்பு Updated: 24/01/2014 கவிதை
எழுத்து அளவு:

என்னது?
ஊருக்கு ரோடு கேட்டு
உண்ணாவிரதமா?

இட ஒதுக்கீடு கேட்டு
நடைப் பயணமா?

சேற்றில் மிதக்கும் இந்த
சேரிக்குள் நடப்பதா?
என்னால் முடியாது!

உங்கள் வயிறு
எரிந்தால் போதாதா?
தெருவிளக்கும் எரியணுமா?

தண்ணீர் இல்லை என்கிறீர்கள்
அப்படி என்றால்
கண்ணீர் ஏது?

இலஞ்சம் வாங்கினேன்
என்கிறீர்கள்
நீரூபிக்க முடிந்ததா?

என்ன வயதாகிவிட்டது
என்னைப் போய்
உண்மை பேசச் சொல்கீறீர்கள்

தூரமாய் நில்லுங்கள்
தொட்டுத் தொட்டு
‘காரை’ அழுக்காக்கி விட்டீர்கள்!

நீங்கள் சிரித்தாலும்
பரவாயில்லை
அழுதாலும் பரவாயில்லை
உயிரோடு இருங்கள்
எனக்கு
ஓட்டுப் போட வேண்டும்!


– தமிழ் ப்ரியா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க