32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாளரக் கண்கள்

Dinesh R சேலம் Published: 27/02/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

சாளரக் கதவுகள்
காத்துக் கொண்டிருக்கிறது
திறக்கப்படும் நேரத்திற்காக

காத்திருப்பின் முடிவில்
வேகமாக வெளியேசெல்லும்
அதுவரையில் அறையினுள்
அடங்கிக் கிடந்தவை

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மீண்டும் அறையினுள்
சிறைப்பட வரலாம்
தூசும் துரும்பும்.

அதுபோலத்தான்
மூடியிருக்கும் சிலரின்
மனதில் நுழைய
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

– இராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.