32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தீராத பசி

Dinesh R சேலம் Published: 08/02/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

நட்சத்திர உணவகத்தில்
மிடுக்காக அமர்ந்து
மெதுவாக சாப்பிட்டேன்
அக்கம் பக்கம் உள்ளவர்களைப்
பார்த்து நானும்

அந்தஸ்து காரணமாக
கொள்ள இடமிருந்தும்
மீதி வைத்தேன்
எதற்கென்று தெரியவில்லை
அப்படித்தான் செய்கிறார்கள்
அங்கு வந்த அனைவரும்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என் எதிரிலேயே
வேண்டுமென்றே நான் வைத்த
மிச்சமுள்ள தட்டு
அசுத்தமடைந்ததினால்
சுத்தம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது
மற்றவர்களின் பாத்திரத்துடன்
கழுவப்பட்டு மறுபடியும் வரும்
உணவேந்தி என் போன்றவர்களுக்காக

டிப்ஸ் கொடுத்ததற்காக
நன்றி ஒன்று கிடைத்தது
என்னை விட வயதில் மூத்தவரும்
ஏனோ அண்ணனென
என்னை அழைத்தது ஏனோ

வெளியே வந்ததும்
பச்சிளம் குழந்தைதாங்கி
பரட்டை தலையுடன்
பிச்சை கேட்ட அவளுக்கு
நான் கடன்பட்டுத்தான் வந்தேன்
சில்லறையில்லாததால்

– இராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.