32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வராத கடிதத்திற்கு பதிலாக

Dinesh R சேலம் Published: 22/04/2010 1 நிமிட வாசிப்பு Updated: 30/01/2014 கவிதை
எழுத்து அளவு:

இதுவரை யாரும்
எனக்கு எழுதாத காதல் கடிதத்தை
படிக்கப் போகிறேன்
கதவை தாழிட்டு
இருள் நிரம்பி வழியும் அறையினுள்
ஒற்றை விளக்கின் ஒளிதனில்…

வார்த்தைகள் என்னவாகயிருக்கும்
என பதட்டத்தில்
கடிதத்தை பிரிக்கிறேன்
கைகள் நடுங்குகிறது
வியர்வையால் குளித்துக்கொண்டிருக்கிறேன்
அதனால் நான் போட்டிருக்கும் ஆடையினாலே
என்னுடம்பு துவட்டிகொள்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஈரமாகிப்போனது கடிதத்தின் சிலபகுதிகள்
எத்தனை முறைப்படித்தாலும்
புரியவில்லை முடிவில்
வெறு(ம்)மைதான் மிச்சம்.

இனிமேலெனக்கு
யாரும் கடிதம் எழுதாதீர்கள்
தயவுசெய்து.

– சே.ராஜப்ரியன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.