32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

புதிய தலைமுறை யூடியூப் சேனல் – 1 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில்!

Dinesh R சேலம் Published: 21/11/2023 2 நிமிட வாசிப்பு சமூகம்
எழுத்து அளவு:

தமிழ் செய்தி நிறுவனங்களில் இதுவரை யாருமே எட்டாத, ‘ஒரு கோடி சப்ஸ்கிரைபரர்கள்’ எனும் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது புதிய தலைமுறை. புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 13 வருடங்களும், டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு 11 வருடங்களும் ஆகின்றன. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சற்றும் ஓய்ந்துவிடாமல் ஆயிரம்கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறி வருகிறது. உண்மை உடனுக்குடன் என்ற நோக்கில் செய்திகளில் பிழை இன்றியும், சமரசம் இன்றியும் செயல்பட்டு வருவதே இதற்குக் காரணம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் பார்வையாளர்களுக்கென பிரத்தியேகமான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. K Questions, PT International, PT National, PT Digital explainers, தளபதி, World Cup 2023, எதையாவது பேசுவோம், PT Talks, The political SPYder, Pt digital voice என பிரத்தியேக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இவற்றைத் தாண்டி தினசரி செய்திகள், நேர்படப் பேசு தொகுப்புகள், சிறப்பு நேர்காணல்கள், Big story, நயம்படச் சொல், குற்றம் குற்றமே, வட்டமேசை, அக்னி பரிட்சை, வீடு போன்ற தொலைக்காட்சி exclusive நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை, ஆசிய விளையாட்டுப்போட்டிகள், நடப்பு உலகக்கோப்பை தொடர், சந்திரயான் 3, ஆதித்யா எல்.1, கர்நாடக சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 2024 போன்ற நிகழ்வுகளில் பல்வேறு விவரங்களையும் விரிவாக ஆராய்ந்து உடனுக்குடன் வழங்கியது புதிய தலைமுறை. மேலும் மணிப்பூர் விவகாரம், ஒடிசா ரயில் விபத்து, ஆந்திர ரயில் விபத்து, இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை போன்றவற்றில், களத்திலிருந்தே தகவல்களைச் சேகரித்து பிரத்தியேகமாக நேயர்களுக்குக் கொடுத்தது.

தொடர்ந்து சமரசம் இன்றியும், சற்றும் சளைக்காமலும் உழைத்ததன் பலனாய்ப் புதிய தலைமுறை யூ டியூப் தளம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை தற்போது பெற்றுள்ளது. தமிழின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம், டிஜிட்டலிலும் கோலோச்சி ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்ஸ் என்ற சாதனையை எட்டியதற்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.