32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இர்ஃபான் இன் இன்ஃபர்நோ

Dinesh R சேலம் Published: 01/10/2016 2 நிமிட வாசிப்பு Updated: 03/10/2016 அயல் சினிமா
எழுத்து அளவு:

Inferno in Tamil

நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான ‘டாவின்சி கோட்’ மற்றும் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்’ திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்ஃபான் கான் நடித்திருக்கும் ‘இன்ஃபர்நோ’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த ‘இன்ஃபெர்நோ’ திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. ஓர் இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்கும் பெருமை அன்றோ?

“இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் இர்ஃபான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதைப் பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இர்ஃபான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவர் சார், சீன் கானரி சார் போன்ற மாமனிதர்களோடு பணியாற்றுவது போல் இருந்தது” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ் .

“டாம், ரோன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. முதல் முதலாக இந்தப் படம் என்னுடைய தாய்நாட்டில் வெளியாவதை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இர்பான் கான்.

‘இன்ஃபர்நோ’ படத்தை வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் ‘சோனி பிச்சர்ஸ் என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் வெளியிடுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.