32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

Dinesh R சேலம் Published: 04/05/2017 1 நிமிட வாசிப்பு Updated: 05/05/2017 சினிமா
எழுத்து அளவு:

Sangamithra Sruthi

பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார்.

இதைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்கிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர்.

பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள், தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

அழகுடன் வீரமும் மிளிர, சங்கமித்ராவில் ஸ்ருதியின் பாத்திரம் ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளனர் சங்கமித்ரா படக்குழுவினர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.