32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹரோம் ஹரா – இங்க பேச்சே இல்ல செயல்தான்

Dinesh R சேலம் Published: 01/11/2022 2 நிமிட வாசிப்பு Movie Posters
எழுத்து அளவு:

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹரோம் ஹரா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் தலைப்பிற்கான பிரத்தியேக காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘செஹரி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹரோம் ஹரா’. இதில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார்.

இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, ‘அக்டோபர் 31ஆம் தேதி அன்று மாஸான சம்பவம் ஒன்று இருக்கிறது’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வறிப்பின்படி, புதிய படத்திற்கு ‘ஹரோம் ஹரா’ எனப் பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்தியேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1989 ஆம் ஆண்டில் நடக்கும் கதை என்பதும், அங்கு சுப்பிரமணிய சுவாமி ஆலயம், ஜகதாம்பா டாக்கீஸ் எனும் திரையரங்கம், குப்பம் ரயில் நிலையம் போன்ற இடங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை பார்வையாளர்கள் பார்த்திராத புதிய தோற்றத்தில் சுதீர் பாபு தோன்றுவதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு, மாஸான லுக்கில், ஆக்சன் அவதாரத்தில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நின்றிருக்கிறார். அத்துடன், ‘இங்க பேச்சே இல்ல. செயல்தான்’ என சுதீர் பாபு தெலுங்கில் பேசும் வசனங்களும், தலைப்புடன் ‘தி ரிவோல்ட்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிப்பில் தயாராகும் ‘ஹரோம் ஹரா’ எனும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் ‘ஹரோம் ஹரா – தி ரிவோல்ட்’ என படத்தின் தலைப்பு ஆன்மீகமாக இருந்தாலும், காணொளியில் இடம்பெற்றிருக்கும் குரல், பழிக்குப் பழி வாங்கும் அம்சத்தை உரக்க எழுப்புகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.