32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

Dinesh R சேலம் Published: 19/12/2022 2 நிமிட வாசிப்பு Updated: 20/12/2022 இது புதிது
எழுத்து அளவு:

சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. மதன்ஸ்’ பேண்ட்-டின் இசை கச்சேரியில், பெரும்பாலும் கமலின் படங்களில் இருந்து ஒரு கலவையான பாடல்களின் தொகுப்பாகவே பாடப்பட்டது, நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்.

கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல் ஹமீது உடனான நீண்ட கால தொடர்பை அவர் நினைவு கூர்ந்தார். பி. சுசீலா பேசும் போது, ஒரு ஒலிபரப்பாளர் பலராலும் பாராட்டப்படுவது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்பின் ஆழத்தைப் பாராட்டிய அவர், தானும் தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்ட போதிலும், தமிழ்ப் பாடல்களை ஒழுங்காகவும் கச்சிதமாகவும் பாடியதாகக் குறிப்பிட்டார்.

அப்துல் ஹமீது தனது நன்றி உரையில், ஒலிபரப்பாளராகவும், நடிகராகவும் மற்றும் பிற அவதாரங்களாகவும் தனது பயணத்தை உணர்ச்சிகரமாக விவரித்தார். டி.எம்.சௌந்தர்ராஜன் மற்றும் பி.சுசீலாவின் பிசிறற்ற மற்றும் குறைபாடற்ற உச்சரிப்பு பற்றிக் குறிப்பிட்டார். தெனாலி படத்தின் போது கமல்ஹாசனுடனான தனது தொடர்பைப் பற்றிச் சிலாகித்தார். அதில் கமல் சிலோன் உச்சரிப்புடன் வசனம் பேசியதை உளமார பாராட்டினார். நிகழ்வில் ஈடுபட்ட மற்ற அனைவருக்கும், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சிவாஜி கணேசன், டி.எம். சௌந்தர்ராஜன், கே.பாலச்சந்தர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாரதிராஜா, வைரமுத்து போன்ற மூத்த கலைஞர்கள் ஹமீது பற்றி பேசியது பற்றிய ஒலி/ ஒளி விளக்கக்காட்சி திரையிடப்பட்டது, நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.