32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

admin சேலம் Published: 27/11/2013 1 நிமிட வாசிப்பு Updated: 18/01/2014 சினிமா
எழுத்து அளவு:

சில கூட்டணிகள் அறிவிப்பின் போதே வெற்றி நிச்சயம் என்ற கட்டியத்துடன் அறிவிக்கப்படும் .அதைப் போல ஆர்யாவுடன்  இயக்குநர் ராஜேஷ் அமைத்த வெற்றிக் கூட்டணி  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தைத் தொடர்ந்து  இப்போது மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க விழைகிறது. தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான ‘The Show People‘ நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்தில் சந்தானமும் இணைவது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க உள்ளது. தங்களுடைய முந்தைய வெற்றி படங்களை விட இந்தப் படம்  எல்லா  மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறுகின்றனர் ஆர்யா-ராஜேஷ் -சந்தானம்  ஆகியோர்.  

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க