32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

Inbaaraja சேலம் Published: 11/02/2024 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி.


அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள்.

பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் .
ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டோனி பிரிட்டோ இசையமைக்க,  ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சண்முக வேலுச்சாமி எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். கலை இயக்கம் ராமு தங்கராஜ்,  பாடல்களை கபிலன்,  உமாதேவி மற்றும் விவேக் எழுதியுள்ளனர்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.