32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும் – நடிகர் ஆரி அர்ஜுனன்

Inbaaraja சேலம் Published: 13/03/2024 2 நிமிட வாசிப்பு Updated: 14/03/2024 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் ஆரி அர்ஜுனன், ‘பெண்கள் ஒவ்வொருவருமே கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்’ என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரைச் சந்தித்து வாழ்த்துக் கூறியதுடன், அவர்களுக்கு ஆச்சரிய பரிசாகத் தங்க நாணயம் பரிசளித்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் எனத் தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன், தன் அன்னையின் நினைவாக மகளிரைக் கொண்டாடும் வகையில் அவர்களுக்குப் பரிசளித்துள்ளார்.

ஆரி அர்ஜுனன், “ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். குறிப்பாக நம் இரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை, என அனைவரையும் தாண்டி, நமக்காகவும் இந்தச் சமூகத்திற்காகவும் உழைக்கக் கூடிய, கோடான கோடி மகளிர்கள் இங்கு இருக்கிறார்கள். என் அம்மாவின் நினைவாக சமூகத்திற்காக உழைக்கும் மகளிர் சிலரைச் சந்தித்து, சர்ப்ரைஸாக ஒரு சின்ன பரிசையும் அளிக்கும் பணியை, இன்று துவங்கியுள்ளேன். அத்தோடு இல்லாமல் எளிய வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் இதைச் செய்யப் போகிறேன்.

முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமல்லவா, என் குடும்பதிற்காக உழைக்கும் மனைவிக்கு நன்றி சொல்லி, அனைத்து மகளிருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித்தர ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.

சாலைகளைச் சுத்தம் செய்யும் பணியாளர் 3 பேருக்கும், தெருவோர கூழ் கடை வைத்திருக்கும் பெண்கள் 2 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர் மற்றும் திரைப்பட புரடக்சன் யூனிட்டில் பாத்திரம் கழுவும் 2 பேர் என பலதரப்பட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறியதுடன் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.