32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review

Dinesh R சேலம் Published: 25/09/2026 2 நிமிட வாசிப்பு Updated: 27/09/2026 இது புதிது
எழுத்து அளவு:

மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறை கானா கலைஞர்கள் பற்றிய கதையிது. 1979 இல் ஒரு புறக்கணிப்பில் தொடங்கும் படம், 2026 இல் கிடைக்கப்பெறும் அங்கீகாரத்துடன் படம் நிறைவுறுகிறது. வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, ஒரு கலைஞனாய் தனக்கு விருப்பமானதைச் செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் படம் அழுத்தமாகப் பேசியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கானா தாஸ், டைகர் சிவா, DJ ஜீவா என மூன்று பாத்திரங்களில் தோன்றியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. நடிப்பால் வித்தியாசம் காட்டாமல், சிகை அலங்கார மாற்றத்தோடு நிறுத்திக் கொண்டுள்ளார். மூன்று பாத்திரங்களிலும் இளையவராக மட்டும் ஆதி நடித்து, வளர்ந்தவுடன் தாத்தா கானா தாஸாகக் கருணாஸையும், அப்பா டைகர் சிவாவாக பாபா பாஸ்கரையும் நடிக்க வைத்துள்ளது கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கருணாஸிற்கும், பாபா பாஸ்கருக்கும் அற்புதமான கதாபாத்திரங்களை வழங்கியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

கெட்டிகா ஷர்மா, சைத்ரா J.ஆச்சார், ரம்யா ரங்கநாதன் என படத்தில் மூன்று கதாநாயகிகள். சைத்ரா J. ஆச்சார் மின்னலென மறைகிறார்; கெட்டிகா ஷர்மா கவர்ச்சிக்காகவும்; சாஸ்திரிய சங்கீதத்தை விட கானா இசை எவ்வகையில் கம்மியெனக் கேள்வியெழுப்புவராக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளனர். ‘மீசைய முறுக்கு (2017)’ படத்தில் இருந்து சில கதாபத்திரங்களைப் பயன்படுத்தியிருந்தாலும், அப்படத்திற்கும் இப்படத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிராகன் படத்தில் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்தது போல் ஹர்ஷத் கானால் இப்படத்தில் செய்யமுடியவில்லை. திரைக்கதையின் போதாமையும் அதற்கொரு காரணம். படம் ஆங்காங்கே கலகலப்பு அடைய வைத்தாலும், முழுப்படமாக ஒரு நிறைவின்மையே எஞ்சுகிறது.

மக்களின் இசையாக ஒலித்து உணர்வையும் உத்வேகத்தையும் தரவேண்டிய க்ளைமேக்ஸ் பாடல் பதினைந்து பாடல்களில் ஒன்றாக மட்டுமே இருக்கிறது. அக்கலைஞர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வெற்றியாக மாறவில்லை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.