நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் ‘கோல்டன் பாக்கியம்’ படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு, டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவைத் தாங்கி வருகிறது.
இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘தெலுமிழ் (Telumil)’ படைப்பாகும்.
கிளிம்ப்ஸில், ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ்க் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.
எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.
யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும் வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு காமெடி நடிகர்களை ஒரு பைலிங்குவல் கிராஸ்-ஓவர் என்டர்டெய்னருக்காக ஒன்றிணைத்து இயக்குநர் பவன் பாசம்செட்டி தனித்துவமான ஒன்றை முயற்சி செய்துள்ளார். கூடுதல் சுவாரசியமாகத் தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதையும், தமிழ் நட்சத்திரம் யோகி பாபு தெலுங்கு பேசுவதையும் காண முடிகிறது. யோகி பாபு மற்றும் சத்யா இருவரும் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தனித்துவமான காமெடி ஸ்டைல் மற்றும் அபாரமான டைமிங் முதல் முறையாக இந்தப் படத்தில் ஒன்றிணைகிறது.
தலைப்பு அறிவிப்பில், மற்றொரு நகைச்சுவைத் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை சங்கராந்தி வெளியீடாக அறிவித்து, பின்னர் சங்கராந்தியை அடித்துவிட்டு, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
நடிகர்கள்:
யோகி பாபு
சத்யா
ஜெயஸ்ரீ
அதிராஜ்
வென்னேலா கிஷோர்
சுதர்சன்
கிஷோர் திருமலா
ரோகிணி
தனிகெள்ளா பரணி
சுனில் ரெட்டி
தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் – பவன் பாசம்செட்டி
தயாரிப்பாளர்கள் – நாகார்ஜுனா ரெட்டி & பவன் பாசம்செட்டி
பேனர்கள் – ட்ரீம் மூவி மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு
இசை – பவன் CH,நிதிஷ் ஜான்
ஒளிப்பதிவு – பப்லு அஜு
படத்தொகுப்பு – ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு – சிவா காமேஷ் D
மக்கள் தொடர்பு – யுவராஜ்

