32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

Dinesh R சேலம் Published: 13/08/2013 1 நிமிட வாசிப்பு Updated: 31/01/2014 சினிமா
எழுத்து அளவு:

ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது  அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு  ஃப்ரொஃபஷ்னல்l நடிகையாக  மழை வெயில் எனப் பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குநர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும்  என் வெற்றியை உறுதி செய்கிறது. 

இதை எல்லாவற்றையும் விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்தப் பட்டதை அளித்து இருக்கலாம்‘ என புன்னகையோடு  கூறுகிறார் ஹன்சிகா.  

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.