32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘நண்பேன்டா’ அனிருத்

Dinesh R சேலம் Published: 24/03/2014 1 நிமிட வாசிப்பு Updated: 25/03/2014 சினிமா
எழுத்து அளவு:

Anirudh அனிருத்

யுவன் சந்திரசேகர் ஷெட்யூல் ரொம்ப டைட்டாக இருந்ததால், வடகறி படத்திலிருந்து ஒரே ஒரு மெலடியுடன் விலகிக் கொண்டுள்ளார். படத்தை விரைவாக முடிக்க வேண்டுமென்பதால், படத்தில் வேறு இசையமைப்பாளரை உபயோகிக்கவும் யுவன் முழுமனதுடன் சம்மதித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிலையில் அனிருத், வடகறி படத்தில் இசையமைக்க 22 வயதாகும் தனது நண்பர் விவேக் சிவாவைப் பரிந்துரைத்துள்ளார். கிளாச்சிகல் மியூசிக் பயின்ற விவேக் சிவா, அனிருத் இசையமைத்த 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டம் உலகம், வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் சிவா, 23 வயதாகும் மெர்வின் சாலமனுடன் இணைந்து, 4 பாடல்களை வடகறி படத்திற்காக கம்போஸ் செய்துள்ளனர். லண்டன் ட்ரினிட்டி ஸ்கூலில் செர்ட்டிஃபை செய்யப்பட்ட பியானிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பின்னணி இசையையும் இந்த இணையே கம்போஸ் செய்கின்றனர்.

இதைக் குறித்து, “விவேக் சிவாவை அறிமுகம் செய்ததற்காக முதலில் அனிருதுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேக் சிவா, மெர்வின் சாலமன் இருவரும் கவனிக்கப்பட வேண்டிய திறமையானவர்கள் என நிரூபித்து விட்டனர். வித்தியாசமான ஜானரில் அமைந்துள்ள பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கும் இந்த ஆல்பம் ரொம்ப பிடிக்கும். விரைவில் வெளியிடப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.