32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஆதி, ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’

Dinesh R சேலம் Published: 30/03/2022 1 நிமிட வாசிப்பு Updated: 23/04/2022 கேலரி
எழுத்து அளவு:

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.