Shadow

Tag: SAC

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

Trailer, காணொளிகள், சினிமா
'ஆலகாலம்' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். 'ஆலகாலம்' என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. 'ஆலகாலம்' என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா...
எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

சினிமா, திரைத் துளி
ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா என்று ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர்ஃபுல்லாகப் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்காக ஜெய் மிக சிரத்தை எடுத்துச் சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீலஃப் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். C.M. யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை ...