32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜனவரி 7 முதல் ‘அடங்காமை’

Dinesh R சேலம் Published: 06/01/2022 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஜனவரி 7 முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்” என்றனர் தயாரிப்பாளர்கள் பொன் புலேந்திரனும், மைக்கேல் ஜான்சனும். திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றனர். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத்தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

>> ஒளிப்பதிவு – P.G. வெற்றி
>> பாடல் இசை – கியூரன் மென்டிசன்
>> திரை இசை – M.S ஸ்ரீகாந்த்
>> படத்தொகுப்பு – துரைராஜ்
>> பாடல்கள் – ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன்
>> நடனம் – சீதாபதிராம், கபில் ஷாம், ஜெனோசன் ராஜேஸ்வர்
>> சண்டை – முரளி
>> வசனம் – ஏ.பி.சிவா

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் நாளை வெளியிடுகிறார்கள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.