
திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட “ஆலப்புழா ஜிம்கானா” திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது. ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லென்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் பொய்யாகக் குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம் சேருகிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் கோச் ஆண்டனி ஜோஷுவாவைச் (லூக்மேன் அவரன்) சந்திக்கிறார்கள். அவர் கடின உழைப்பும், வியர்வையும், உண்மையான சண்டையையும் வலியுறுத்துபவர். ஆரம்பத்தில் ஒரு குறுக்கு வழியாக இருந்தது, விரைவில் வியர்வை, சுயவிழிப்பு மற்றும் உயிருள்ள நட்புறவின் ஒரு போராளியின் பயணமாக மாறுகிறது.
தன் பாத்திரத்தைப் பற்றிப் பேசும் போது, “ஆலப்புழா ஜிம்கானாவில் ஜோஜோ ஜான்சனாக நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்க, எனது சொந்த பலவீனங்கள் மற்றும் வலிமைகளைப் பயன்படுத்த வேண்டி இருந்தது. Sony LIV-இல் வெளியாகும் OTT வெளியீடு மூலம், இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் கனெக்ட்டாகும் என நம்புகிறேன்” என்றார் நஸ்லென்.

காலித் ரஹ்மான் இயக்கி, காலித் ரஹ்மான், ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், நஸ்லென், லூக்மேன் அவரன், கணபதி எஸ். பொடுவால், சந்தீப் பிரதீப், அனகா ரவி, பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன் மற்றும் சிவ ஹரிகரன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்களின் நடிப்புடன், புத்துணர்ச்சியும் குழப்பமும் கலந்து களைகட்டும் ஒரு விருந்தாக திகழ்கிறது.
Trailer Link: https://www.instagram.com/reel/DKjuLAfxQTZ/?igsh=Z2d2cjFuMDFoa3E=

