Shadow

Tag: Done Rekha

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
விஜய் ஆண்டனி நடிப்பில் 25 ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கும் ‘சக்தித் திருகன்’ எனும் படம், மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரது முந்தைய படங்களான அருவி மற்றும் ‘வாழ்‘ ஆகும். அவரது மூன்றாவது படமான ‘சக்தித் திருமகன்’ ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகவுள்ளது. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள்:-எழுத்து இயக்கம் - அருண் பிரபு ஒளிப்பதிவு - ஷெல்லி காலிஸ்ட் இசை - விஜய் ஆண்டனி படத்தொகுப்பு - ரேமண்ட் ...
Bad Girl | பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்திய படம்

Bad Girl | பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்திய படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் & அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தொகுப்பாளரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தின் ட்ரைலர் பார்த்தேன். மிகவும் நன்றாக...
“பல முதல் விஷயங்கள் இருக்கு” – இயக்குநர் வெற்றிமாறன் | Bad Girl

“பல முதல் விஷயங்கள் இருக்கு” – இயக்குநர் வெற்றிமாறன் | Bad Girl

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் & அனுராக் காஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தொகுப்பாளரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குநர் மிஷ்கின், நடிகை டாப்ஸி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றிமாறன், “கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், எந்தக் கதை...
BAD GIRL – Coming of Age Family Drama

BAD GIRL – Coming of Age Family Drama

இது புதிது, சினிமா, திரைத் துளி
காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காகத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் "BAD GIRL" படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Coming of Age Family Drama "BAD GIRL" படமானது வரும்  30 ஜனவரி, 2025  முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் 54 ஆவது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள்:-அஞ்சலி சிவராமன் சாந்தி பிரிய...
விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment

விடுதலை பாகம் 2 – 25 ஆவது நாள் நிறைவு | RS Infotainment

இது புதிது, சினிமா, திரைத் துளி
விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியில் உள்ளது. “விடுதலை’’யின் ஆழமான திரைக்கதை, எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் களத்தின் எதார்த்தத்தையும் தைரியமாகச் சித்தரித்துள்ளது. விடுதலை பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் பரவலான வரவேற்பும், உணர்வுப்பூர்வமான ஆதரவும் மக்களிடையே கிடைத்துள்ளதில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் பெருமிதமாக உணர்கிறது.“விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இயக்குநர் வெற்றி மாறன் அ...
சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

இது புதிது, சமூகம்
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், ‘இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம்’ என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன்....
ரோமியோ விமர்சனம்

ரோமியோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து 'கரெக்ட்' செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித்த...
“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இருவரும் 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் தலைவாசல் விஜய், "இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தைத் தனது மனவலிமையால்...