32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அம் ஆ – மலையாளப் படத்து நாயகியாக தேவதர்ஷினி

Dinesh R சேலம் Published: 15/04/2025 2 நிமிட வாசிப்பு Updated: 17/04/2025 சினிமா
எழுத்து அளவு:

காபி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் மனதை இலகுவாக்கும் அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ” ஆகும். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெறப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மலையாளத்தில் வெளிவந்து பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ள இப்படம், திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது.

ஒரு தாயின் பாசத்தைப் பேசும் இப்படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷினி தாயாக, மிக அழுத்தமான பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். இதுவரையிலும் நகைச்சுவையில் கலக்கிய இவர், இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்.

ஸ்டீஃபன் எனும் சாலை கான்ட்ராக்டர், கவந்தா எனும் ஒரு மலை கிராமத்திற்குச் செல்கையில், அங்குள்ள ஒரு தாயையும் மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது. மனிதர்களின் அன்பை, அழகாகப் பேசும் ஓர் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

திலீஷ் போத்தன், தேவதர்ஷினி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – தாமஸ் செபாஸ்டியன்
எழுத்தாளர் – கவிபிரசாத் கோபிநாத்
தமிழ் மொழி மாற்ற எழுத்தாளர் – எஸ்.ஆர்.வாசன்
ஒளிப்பதிவு – அனிஷ்லால் ஆர்.எஸ்
இசை – கோபி சுந்தர்
படத்தொகுப்பு – பிஜித் பாலா
கலை – பிரசாந்த் மாதவ்
ஒப்பனை – ரஞ்சித் அம்பாடி
உடை – குமார் எடப்பல்
கலரிஸ்ட் – சிபி ரமேஷ், கலர்பிளானெட் ஸ்டுடியோஸ் கொச்சி
பாடலாசிரியர்கள் – பாபுராஜ் களம்பூர், சத்தியவேழன்
ஸ்டில்ஸ் – சினாட் சேவியர்
சண்டை – மாஃபியா சசி
ஒலி கலவை – கருண் பிரசாத், சவுண்ட் ப்ரூவரி கொச்சி
முதன்மை இணை இயக்குநர் – கிரீஷ் மாரார் தயாரிப்பு மேற்பார்வை – கிரீஷ் அதோலி
மக்கள் தொடர்பு – கேப்டன் ஆனந்த்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.